Saturday, February 22, 2014

அழகிகள் கெட்ட
வார்த்தைகள் பேசுவார்களா?

அப்படி பேசினால் என்
தமிழுக்கு கெட்டுப்போன
அழகுவார்த்தைகள்
கிடைக்குமோ! —

Saturday, August 27, 2011

நட்பு...


நட்பென சேர்வதர்க்கு
நாட்கள் பல ஆகிறது..

ஆனால் உதிர்வதற்க்கோ
நொடிகள் போதுமாகிறது..

நட்புக்குள் சண்டை
அவசியம்..

அதே போல் சண்டையால்
பிரிக்க முடியாதா
நட்பும் அவசியாம்...

நட்புடன்..சி.ஐ.ரமேஷ்...

Monday, July 11, 2011

அவள் தோழியான கதை


முதன் முதலாக என்னைப் பார்த்தபோது
வெட்கப்பட்டு கீழே குனிந்து
சிறு புன்னகை வீசிச் செல்லாமல்
ஹாய் சொல்லி என்னைப் பற்றிய
விபரங்களைக் கேட்டறிந்ததனால்...
என்னிடம் நூறுரூபாய் வாங்கிகொண்டு
இத்தனாந்தேதி திருப்பித் தந்துவிடுவேன்
என்று சொல்லாமல் சென்றதனால்....
என் சட்டையில் வியர்வைவாசம்
வீசும்போது முகம் சுளிக்காமல் கூந்தல்
மல்லிகை பறித்து சட்டைப்பைக்குள் போட்ட்தனால்...
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்
போது அப்பா வந்தவுடன் பிரிந்தோடி
மறையாமல்அவரிடம்
என்னை அறிமுகப்படுத்தியாதனால்..
உன்னிடம் ஒன்று சொல்லவேண்டுமென்று
அடிக்கடி சொல்லிக்கொண்டு இதுவரை
சோல்லாமல் இழுத்துக் கடத்தியதனால்....
அவள் என் தோழியானால்...
அவளுடைய நினைவுகளை
மனதிலேயே வைத்துக்கொள்ளாமல்
உங்களுடன் பகிர்ந்து கொள்வதனால்
நான் உங்கள் தோழனாகிறென்....
நட்புடன்
சி ஐ ரமேஸ்.........

அவள்


வானம் காற்று
மரங்கள் செடிகொடிகள்
பூக்கள் என
கவிபொரூள் ஆயிரம்
இருந்தாளும்
என் கவிதையின்
முழுப்பொருளும்
அவளே.......

Wednesday, July 6, 2011

ஆட்டுக்காரன் பாட்டு

அஞ்சாறு மைலு போக வேணும்,
ஆத்தங் கரயும் தாண்ட வேணும்.
பச்சயத்தான் பாக்க வேணும்,
பகல் முழுக்க மேய்க்க வேணும்,
புழுக்க எல்லாம் அள்ள வேணும்,
வயக்காட்டுல தள்ள வேணும்!

முழுவாம இருக்குது மூணாடு
மொதக் குட்டி போடுது ரெண்டாடு
பெண்குட்டி அது போட்டாக்க
பட்டிக்கு வந்து சேந்துருமே
ஆண்குட்டியா போட்டுதுன்னா
பண்ணைக்குத்தான் போகிருமே!

ஆடு வவுறு நெறஞ்சாத்தான்
பாவி மனசு நெறயுமுன்னு
ஆட்டுக் காட்டுல அலஞ்சதால
அறிவத்துப் போயிருச்சு
ஆட்டுக் கார கருப்பன்னு
ஊருக்குள்ள பேராச்சு!

நான் பெத்த புள்ளயாச்சும்
நல்லாய் படிக்க ஆசப்பட்டா
ஆடு வித்தப் பணத்தால
பண்ண புள்ள படிச்சுருச்சு
ஆடு வளத்த அடயாளமா
ஆட்ட மேய்க்குது எம்புள்ள!

Tuesday, February 22, 2011

விடுப்புக்கொடு













உலக அழகியல்லடீ நீ...
என்னை எவ்வளவுதான் வெலுத்துகொண்டாலும்
அழகு பொருட்க்களை தின்று தீர்த்தாலும்
அப்பொருள்களுக்கு என்னைத் தின்னக்குடுத்தாலும்
உன் பார்வை என்மேல் படாதடி.....

தினந்தோரும் உன் வீட்டில் உன் பிம்பத்தை
உணக்கு பிரதிபலிக்கும் அந்தக் கண்னாடிக்கு
விடுப்புக்கொடு ஒருநாள் ...

அந்நாள் உலகமே உனக்கு அழகாகத்
தெரியும்,,,

ஏன் என்றால்?

உலக அழகியல்லடீ நீ...
அதைவிட அழகி....

புலம்பல்








ஓட்டமும் நடையும் உன் அசைவுகளை
கவிதையாக்குவேன்....
பார்த்து தொடரும் உன் பாதச்சுவடை
படிகள்ளாக்குவேன்....
எரிமலையின் சீற்றந்தன்னை உன் இதழ்ழடியில்
ஒலிக்க கான்பேன்....
பட்டாம்பூச்சியின் படபடபை உன் கண் இமையில்
கண்டு கொல்வேன்......
கற்பனையின் எல்லை செல்வேன் காரனம்
நீ என்பேன்.....
கன்னே நீ இருந்த போதும்
எட்டி நின்றேன்.....
நீ பறந்தபோதும் நான்
பார்த்தே நின்றேன்.....
உனர்ந்தேன் அடி பாவம்மடி
நீ....
ஒவ்வொரு நாளும் என்னை பார்த்தவள்
அல்லவா நீ....
அடி போடி பைத்தியகாரி
உன் அருமை தெரியாதவள்...
இப்படியானது என் புலம்பலின்
மொழிபெயர்ப்பு......